ஜப்பான்: ஜப்பான் சிஜோகா மாகாணத்தில் உள்ள மிஷிமா நகரில் உள்ள லப்பர் தொழிற்சாலையில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலர் காயம் அடைந்தனர். கத்திக்குத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தொழிற்சாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்களை கத்தியால் குத்திய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
