- சிக்கந்தர் தர்கா சந்தனகோடு திருவிழா
- திருப்பரங்குந்தரம்
- அய்கோர்ட் கிளை
- மதுரை
- ஐகோர்ட் கிளை
- சிக்கந்தர் தர்கா சந்தனகுடு திருவிழா
- திருப்பரங்குந்தரம்
- சந்தன்குடு கந்தூரி
- சிக்கந்தர் பதுஷா தர்கா
- திருப்பரங்குந்தரம் மலை
மதுரை : திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்கு தடையில்லை என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் சந்தனக்கூடு கந்தூரி விழா நடத்த தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இதில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறும். சந்தனக்கூடு விழாவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி நடைபெறும். ஏற்கனவே, அசைவ கந்தூரி விழா நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சந்தனக்கூடு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஜன.9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கந்தூரி நடத்த தடை விதிக்க கோரி ஐகோர்ட் கிளையில் மாணிக்க மூர்த்தி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே கந்தூரி நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதை கருத்து கொள்ளாமல் இந்த வருடமும் சந்தனக்கூடு என்ற பெயரில் கொடியேற்றி, விழாவை தொடங்கியுள்ளனர். எனவே கந்தூரி நடத்த தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தர்கா தரப்பில் யார் ஆஜராகினர் என கேட்டனர். அப்போது மனு தாரர் தரப்பில் இந்த வழக்கு இன்று தான் விசாரணைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இடைக்கால உத்தரவுக்கு எதுவும் பிறப்பிக்க முடியாது எனவும் தர்கா தரப்பில் மனுதாரர் தரப்பில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை வரும் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த விழாவில் எந்த இடைக்கால தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
