×

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷா வரும் 9ம் தேதி தமிழகம் வருகை

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷா வரும் 9ம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணி அமைந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால், ஆனால், வேறு எந்த கட்சிகளும் இந்த கூட்டணியில் சேரவில்லை.

இந்த நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஸ் கோயல், இணைப் பொறுப்பாளர் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை சென்னை வந்தனர். அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பாஜக 70 தொகுதிகளை கேட்டதால் அதிமுக கடும் அதிர்ச்சியடைந்து. சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பிய போது அவர், உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால் தனது தலைமையிலான இந்த காலகட்டத்தில் பா.ஜ. அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக” மட்டும் தெரிவித்தார். அதே நேரத்தில் முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அமமுக, ஓபிஎஸ் ஆகியோர் தற்போது அந்த கூட்டணியில் இல்லை. அதேபோல் தேமுதிக, பாமகவும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

எனவே கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருகின்றன. கூட்டணியை உறுதிப்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தவும் பாஜ திட்டமிட்டது. அதே நேரத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பிரசார பயணத்தை பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் வரும் 9ம் தேதி புதுக்கோட்டையில் நிறைவு செய்கிறார்.

இந்த இரு விழாக்களையும் ஒரு சேர நடத்தவும் இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் வருகை உறுதியாகவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு 9ம் தேதி அமித்ஷா வருகை உறுதியாகிவிட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். வே எந்தெந்த கட்சிகள் வரும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Amitsha ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED சொல்லிட்டாங்க…