×

டெல்லி ரொம்ப தூரத்தில் இருக்கு… கூட்டணி, உத்தேச தொகுதி எனக்கு எதுவும் தெரியாது: இந்தியில் அண்ணாமலை விரக்தி

கோவை: கூட்டணி பேச்சுவார்த்தை, உத்தேச தொகுதி பட்டியல் என எந்த விபரமும் எனக்கு தெரியாது என்று அண்ணாமலை கூறினார். கோவையில் நேற்று பாஜ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் குழந்தைகளை சிலர் தடுத்து நிறுத்தி உள்ளனர். பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இது விரும்பத்தகாத மற்றும் வருத்தப்படக்கூடிய செயல். இதனை யார் செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கட்சி கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. எனவே கூட்டணி பேச்சு வார்த்தை, உத்தேச பட்டியல் தொடர்பாக எனக்கு எவுதும் தெரியாது. இதனைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட தலைவர்கள் தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளது. எனவே தேஜ கூட்டணி எப்படி இருக்கும், அதன் வலிமை எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தேமுதிக சார்பில் கடலூரில் ஜனவரி 9ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. ஜனவரியில் எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சி கூட்டம் நடத்தி கருத்துகள் கேட்டு உள்ளார். எல்லோரும் நல்ல முடிவு எடுப்பார்கள். தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் சில தவறுகள் இருக்கலாம். தவறுகள் நடப்பது சகஜம். மத அரசியல் செய்வது நாங்கள் இல்லை. தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்திருக்கிறார். பாஜவிற்கு கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. பா.ஜ வலிமை எங்களுக்கும் தெரியும், மற்ற கட்சிகளுக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு டெல்லி ரொம்ப தூரத்தில் உள்ளது என மழுப்பலாக இந்தியில் பதில் அளித்து சென்றார்.

Tags : Delhi ,Annamalai ,Coimbatore ,president ,BJP ,Assam… ,
× RELATED பனையூரில் விஜய் காரை மறித்து...