சென்னை: கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து, கிருமிநாசினிகள் தெளிக்கவும் தமிழக சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது.
