×

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30ம் தேதி நடைபெறும் என கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர், டிச. 25: பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவுசெய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள் மீது வரப்பெற்ற புகார் மனுக்கள் மீது எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுத்து, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி மாலை 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள் எரிவுாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என்று மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Perambalur district ,Perambalur ,District Collector ,Mrinalini ,Perambalur district… ,
× RELATED கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு...