×

கூட்டணி தொடர்பாக அதிமுக, பாஜவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை: ஜி.கே.மணி பேட்டி

 

சேலம்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம்ராயப்பனை சந்தித்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஜி.கே.மணி அளித்த பேட்டி: வரும் 29ம் தேதி சேலத்தில் ராமதாஸ் தலைமையில், பாமக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில், இந்த பொதுக்குழுவை நாங்கள் மிக முக்கியமானதாக கருதுகிறோம். கூட்டணி குறித்து ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். பாமகவின் ஒரே தலைவர் ராமதாஸ் தான்.

கூட்டணி தொடர்பாக, அதிமுக மற்றும் பாஜ சார்பில் எங்களுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. பாமக என்றால் ராமதாஸ்தான். இப்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால், கடந்த ஓராண்டாக ராமதாஸ் மிகப்பெரிய வேதனையில் உள்ளார். யார்? வேண்டுமானாலும் பாமக என கூறி கொள்ளலாம். தமிழக மக்கள் யார் சொன்னால் வாக்களிப்பார்கள். ராமதாஸ் சொன்னால் தான் வாக்களிப்பார்கள். இதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Adimuka ,Bajaj ,G. K. ,Salem ,Pamaka Gaurawa ,G. K. Mani ,Arul MLA ,Salem Diocese ,Pastor ,Arulselvamraappa ,Christmas ,New Year ,G. K. PM ,Ramadas ,Phamaka Executive Committee ,
× RELATED அன்புமணி பாமகவில் உறுப்பினர் கூட...