×

உக்ரைனுக்கு உதவிய ஸ்டார்லிங் செயற்கைகோள்..தாக்க தயாரான ரஷ்யாவின் எஸ்-500 ஏவுகணை

ரஷ்யா: உக்ரைனுக்கு உதவிய எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைகோளை குறிவைத்து தாக்குதல்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக நேட்டோ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது இந்தியா நடத்திவரும் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன இதனால் அவசர தொலை தொடர்புகளுக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங் அதிவேக இணைய சேவையை உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வருகிறது. இதனால் கடுப்பான ரஷ்யா உக்ரைனுக்கு வர்த்தக ரீதியில் தொலை தொடர்பு சேவைகளை வழங்கும் செயற்கை கோளை தாக்குவோம் என எச்சரிக்கை விடுத்து வருகிறது.

கிழடுக்கு சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும் செயற்கை கோள்கள் மீது தாக்குதல் நடத்த எஸ்-500 ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யா சமீபத்தில் கூறி அதிர்ச்சி கொடுத்தது. குறிப்பாக வான்வெளியில் செயலிழந்த செயற்கை கோள்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தும் சோதனையை கடந்த 2021ம் ஆண்டு ரஷ்யா நடத்தி முடித்தது. தற்போது எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கை கோள்கள் மீது தாக்குதல் நடத்த வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் கூரான இரும்பு துண்டுகளை ஆயுதமாக பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக நேட்டோ உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இரும்பு துண்டுகள் செயற்கை கோள்கள் மூலம் எடுத்து சென்று பூமியிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்ட பாதையில் ஆங்காங்கே தூவப்படும் இந்த கூர்மையான இரும்புத்துண்டுகள் விண்ணில் வட்டமிட்டு வரும் செயற்கை கோள்கள் மீது மோதி தாக்குதல் நடத்தும். இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதம் அனைத்து நாட்டு செயற்கை கோள்களையும் வலுவிழக்க செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த யுக்தியை பயன்படுத்தி உக்ரைனுக்கு தகவல் சேவையை வழங்கிவரும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கை கோள்களை தாக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ukraine ,Russia ,NATO ,Elon Musk ,India ,
× RELATED வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர்...