×

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும் வெள்ளி வென்றால் ரூ.4 கோடிவழங்கப்படும் எனவும் வெண்கலத்திற்கு ரூ.3 கோடி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை கண்ணாடி மாளிகையில், கர்நாடக ஒலிம்பிக் சங்கம் சார்பில் ‘கர்நாடக ஒலிம்பிக் 2025’ விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் சித்தராமையா, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும், அதன் வளர்ச்சிக்கு உதவிய அதிகாரிகளுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இதையடுத்து சர்வதேச அளவில் கர்நாடக வீரர்கள் பதக்கங்களை வேட்டையாட வேண்டும் என்ற நோக்கில், மெகா பரிசுத் தொகையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் எனவும் வெள்ளி வென்றால் ரூ.4 கோடிவழங்கப்படும் எனவும் வெண்கலத்திற்கு ரூ.3 கோடி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

‘கடின உழைப்பும், தெளிவான இலக்கும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் எங்களது அரசு எப்போதும் முன்னணியில் இருக்கும்’ எனவும் சித்தராமையா கூறினார்.

Tags : Olympic Games ,Chief Minister ,Karnataka Siddaramaiah ,Bangalore ,Karnataka ,Siddaramaiah ,Veerangans ,
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை...