×

குட்கா விற்றவர் கைது

திருச்சி,டிச.22: திருச்சி தில்லைநகர் பகுதியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி தில்லைநகர் பகுதியில் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிச.20ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தில்லைநகர் 7வது கிராஸ், தூக்குமேடை தெருவை சேர்ந்த கணேசன்(42) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 100 கிராம் குட்காவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Gutka ,Trichy ,Thillai Nagar ,Thillai Nagar 7th Cross, Tukumedai Street… ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...