×

கூடலூர் தொகுதி (109 தனி):

92 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 496 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். குன்னூர் தொகுதி (110): 91 ஆயிரத்து 301 ஆண்கள், 99 ஆயிரத்து 999 பெண்கள், 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரம் 307 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.  மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 2 லட்சத்து 81 ஆயிரத்து 762 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 03 ஆயிரத்து 270 பெண் வாக்காளர்கள், மூன்றாவது பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 049 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 13 ஆயிரத்து 296 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில்: வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு வாக்காளர்களின் பொறுப்பாகும். குறிப்பாக 1950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை வேட்புமனு தாக்கல் செய்யும் வரை மேற்கொள்ளலாம், என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, உதவி ஆட்சியர்கள் ரஞ்சித் சிங், மோனிகா ரானா, கூடலூர் ஆர்டிஒ., ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Cuddalore Block ,
× RELATED கடலூர் தொகுதியில் 10 வளர்ச்சி...