×

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதலில் 8 பேர் பலி

கீவ்: உக்ரைனில் உள்ள துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதில் 8 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் -ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு முயற்சிளை மேற்கொண்டு வருகின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பு மீது நேற்று முன்தினம் இரவு ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் காயமடைந்த பலர் ஒரு பேருந்தில் இருந்ததாக தெரிகின்றது. இதனிடையே உக்ரைன் ராணுவம் டிரோன்கள் மூலமாக ரஷ்ய போர்க்கப்பலான ஓகோட்னிக் மற்றும் பல கட்டமைப்புக்களை தாக்கியது தெரிவித்துள்ளது.

Tags : Russia ,Kiev ,Ukraine ,US ,President Donald Trump ,
× RELATED ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்