×

திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்

 

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்து வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை மற்றம் சேப்பாக்கம் விக்டோரியா ஹாஸ்டல் சாலை பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு புகார் வந்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேற்று திருவல்லிக்கேணி போலீசார் உதவியுடன் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது பெல்ஸ் சாலை சிஎன்கே சாலை சந்திப்பில் போதை பொருள் விற்பனை செய்த அம்பத்தூர் இந்திரா நகரை சேர்ந்த சாருகேஷ்(21), எழும்பூர் சந்தோஷ் நகரை சேர்ந்த ரோஷன்ராஜ்(21), சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரபிஜாக்(26), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அரி கண்ணன்(25), எழும்பூர் பகுதியை சேர்நத் ரித்திஷ்வர்(18) ஆகியோரை பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் 8.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 600 கிராம் கஞ்சா மற்றும் ரூ.1,070 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சேப்பாக்கம் விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் போதை பொருள் விற்ற ரெம்பபூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த நித்திஷ்குமார்(24), திருவல்லிக்கேணி பாரதி சாலையை ேசர்ந்த பிரமோத் மாதவன்(24), சேப்பாக்கம் விக்டோரியா ஹாஸ்டல் சாலையை சேர்ந்த ரேயான்(23) அகிய 3 பேரை பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் 5 கிராம் மெத்தப்பெட்டமைன், 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பிடிபட்ட 8 பேரையும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திருவல்லிக்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Tags : Thiruvallikeni ,Chennai ,Tiruvallikeni Bells Road ,Seppakkam Victoria Hostel Road ,
× RELATED கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.1.37 லட்சம்...