தேவதானப்பட்டி, டிச. 19: தேவதானப்பட்டி எஸ்.ஐ.,நாகராஜன் மற்றும் போலீசார் காட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்ரோடு அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்த போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பாண்டி(39) என்பவரை கைது செய்தனர்.
