சென்னை: எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவிதான் உள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட அண்ணா திருமண மாளிகையை திறந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருமண மாளிகையை திறந்து வைத்து 17 இணையர்களுக்கு முதலமைச்சர் திருமணம் செய்து வைத்தார். ரூ.17.47 கோடியில் கட்டப்பட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரியார் நகர் அமுதம் அங்காடியை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; கொளத்தூர் வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும் உற்சாகம் வந்துவிடும் புத்துணர்ச்சி வந்துவிடும்.
கொளத்தூர் தொகுதியை பார்க்கும் போது அமைச்சர்களுக்கே பொறாமை. கொளத்தூர் என்றாலே சாதனை அல்லது ஸ்டாலின் என சொல்லும் அளவுக்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. கொளத்தூர் மட்டுமல்ல எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான் என்பதை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறோம். சட்ட சிக்கல்களை களைந்து வண்ண மீன் விற்பனை மையத்தை செயல்படுத்தினோம். கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வந்துவிடுவேன். 10 நாட்களுக்கு ஒரு முறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால்தான் எனக்கு திருப்தி. கொளத்தூர் மக்கள் அளிக்கும் வரவேற்பில்தான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, செல்லப் பிள்ளையாக, நல்ல பிள்ளையாக இருப்பேன். கொளத்தூர் பெரியார் நகர் மருத்துவமனை தரத்தை உயர்த்த திட்டமிட்டு பெரிய மருத்துவமனையாக உருவாக்கியுள்ளோம். ஸ்டான்லியை விட ராஜீவ்காந்தி மருத்துவமனையை விட பெரிய மருத்துவமனையாக பெரியார் மருத்துவமனை விளங்குகிறது. பல துறைகளுடன் கலந்து பேசி ஒழுங்குபடுத்தி வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தக மையம் உருவாக்கினோம். கொளத்தூரில் பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முதல்வர் கல்விச் சோலை திட்டம் உருவாக்கம்
கொளத்தூர் தொகுதியில்தான் மாநகராட்சி பள்ளிகள், மருத்துவமனைகள் அதிகம் ஒரு ஆணின் வெற்றிக்கு பின் பெண்கள்தான் உள்ளனர். பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும், அதனால்தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவிதான் உள்ளார். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
