சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சாலையில் கஞ்சா கை மாறுவதாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் சென்று நீண்ட நேரமாக நோட்டமிட்ட காவல்துறையினர் கையில் சிறிய ரக தவறுடன் அங்கும் இங்கும் நடந்தவாறு நீண்ட நேரமாக காத்திருந்த நபர் ஒருவரை அழைத்து ஆய்வு செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ரெடில்ஸ் பகுதியை சார்ந்த சூர்யா என்பது தெரிய வந்தது. அவர் கையில் வைத்திருந்த கவரில் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீஸ் பாணியில் விசாரணை மேற்கொண்டபோது அவரின் நண்பர்களான ராஜ்குமார், தீபக்சுந்தர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சுற்றுலா செல்வதுபோல் தாய்லாந்து சென்று அங்கு ஓஜி ரக விலையுயர்ந்த கஞ்சாவை வாங்கி விமான பார்சல் சேவை மூலம் அனுப்பிவிட்டு சென்னையில் டெலிவரி எடுத்ததாகவும், அதன் பிறகு அதை 200 கிராம் பாக்கெட்டுகளாக பிரித்து சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 200 கிராம் பதபடுத்தபட்ட கஞ்சாவும் அதேபோல் நான்கு கிலோ கஞ்சா இலைகள் மற்றும் செல்போன்களை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
