- கிறிஸ்துமஸ்
- நாசரேத்
- தூய ஜான் அரண்மனை
- ஜோனா சாகா
- மதுரை கிரேஸ் இசைக்குழு
- நாசரேத் திறப்பு விழா வாயில் பிரார்த்தனை குழு
நாசரேத், டிச. 18: நாசரேத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி, இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில், நாசரேத் திறப்பின் வாசல் ஜெபக்குழு சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியாக மதுரை கிரேஸ் கலைக்குழுவினரின் யோனா சரித்திர ஒலி, ஒளி நாடகம் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். உதவிகுரு தனசேகர் ராஜா முன்னிலை வகிக்கிறார். இதையடுத்து நெல்லை ரட்சகா இன்னிசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ஜோனா மற்றும் நாசரேத் திறப்பின் வாசல் ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.
