நாகர்கோவில், டிச.18: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் செயற்பொறியாளர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பணியிடமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்குதல் தொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 10 மாவட்டங்களில் செயற்பொறியாளர்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, சைதாபேட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக செயற்பொறியாளர் (ஜெஜெஎம்) பரமசிவம் குமரி மாவட்ட செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
