டெல்லி: 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்படும் விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் ஜி ராம்ஜி மசோதா மீதான விவாதத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி பேசியுள்ளார். 100 நாள் வேலை பெயர் மாற்ற மசோதா “விக்சித் பாரத்” மசோதா அல்ல; அது “விரக்தி பாரத்” மசோதா என கனிமொழி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
