×

ஜெர்மனியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு; இந்திய உற்பத்தி துறை சரிகிறது: பிரபல கார் ஆலையை சுற்றிப் பார்த்தார்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு முனிச் நகரில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிஎம்டபிள்யூ கார் உற்பத்தி ஆலையை ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு விதவிதமான கார்களை பார்வையிட்ட ராகுல் காந்தி, பிஎம்டபிள்யூ-இந்திய நிறுவனம் டிவிஎஸ் இணைந்து உருவாக்கிய டிவிஎஸ் 450 சிசி பைக்கை ஆர்வத்துடன் கண்டுகளித்தார். அந்த பைக்கில் அமர்ந்தும் ரசித்தார்.

இந்த அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
உலகத் தரம் வாய்ந்த உற்பத்தியை மிக அருகில் காண்பதற்கான நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. வலுவான பொருளாதாரங்களுக்கு உற்பத்தித் துறைதான் முதுகெலும்பு. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் உற்பத்தித் துறை சரிந்து வருகிறது. நாம் வளர்ச்சியை விரைவுபடுத்த, அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் – அர்த்தமுள்ள உற்பத்திச் சூழல் அமைப்புகளை உருவாக்க வேண்டும், மேலும் பெருமளவில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Tags : Rahul Gandhi ,Germany ,New Delhi ,Lok Sabha ,BMW ,Munich ,
× RELATED ரயில் டிக்கெட் முன்பதிவு நிலையை...