×

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு..!!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடன்பிறப்பே நிகழ்ச்சி, மக்கள் சந்திப்பு என்று தொடர்ந்து பல்வேறு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டபேரவை தேர்தல் அறிக்கையை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவானது மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் திமுக செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் குழுவில் உள்ளனர். டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் ஆகியோரும் குழுவில் உள்ளனர்.

கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோரும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம் உள்ளிட்டவர்கள் அமைந்த குழுவை அமைத்து பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த குழுவை பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களும் அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி வர்த்தகர் அணி, தொழில்துறை மற்றும் மருத்துவர், சுற்றுசூழல், மகளிர் பாதுகாப்பு சார்பில் ஒரு பிரதிநிதி மற்றும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி , தொழில்துறை என அனைத்து தரப்பின் கருத்துகளை கேட்கும் வகையில் குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுநல சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள்,

தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்த குழு விரைவில் முதலமைச்சரை சந்தித்து அண்ணா அறிவாலயத்தில் முதற்கட்ட ஆலோசனையை நடத்தி விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அமைப்புகளிடம் கருத்தை தெரிவித்து 2026ம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Election Report Preparation Committee ,Dimuka ,Deputy Secretary General ,Kanimozhi ,Chennai ,2026 election ,Chief Minister ,Mu. K. Stalin ,People's Meeting ,
× RELATED இலங்கைக்கு ஒன்றிய அரசு அழுத்தம் தரவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்