×

ஜி கார்னர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி, டிச.17: திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் குழாய் பதிப்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது, அங்கு நிறுத்தியிருந்த ஆட்டோ அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசாரு க்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (50).
இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். திருமணமாகாததாலும், கடன் பிரச்னையாலும் விரக்தியில் இருந்து வந்ததும், ஏற்கெனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொ லையா என்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : G Corner ,Trichy ,Ponmalai, Trichy ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்