×

உதவி ஹெச்.எம் ஆசிரியையின் அந்தரங்க படங்கள் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள் கைது

திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் (43). அதே பள்ளியில் கணித ஆசிரியையாக இருப்பவர் ஹேமா (36). இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் தனிமையில் செல்போனில் உரையாடும் போது அந்தரங்க புகைப்படங்களை ஒருவருக்கொருவர் செல்போனில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அதே பள்ளி பயிற்சி ஆசிரியர்களாக உள்ள பி.எட் மாணவர்கள் மனக்குன்னம் பகுதியை சேர்ந்த இனியவர்மன் (22), குறிச்சி பகுதியை சேர்ந்த கலைசாரதி (22) ஆகிய இருவரும் உதவி தலைமை ஆசிரியர் கனகராஜின் செல்போனை திருடி அதில் உள்ள ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்கும்படி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் தனது செல்போனை திருடிவிட்டதாக பந்தநல்லூர் போலீசில் கடந்த மாதம் 27ம்தேதி கனகராஜ் புகார் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி பயிற்சி ஆசிரியர்கள் கலைசாரதி, இனியவர்மன் ஆகிய இருவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தது அதிலுள்ள அந்தரங்க புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இருவரும் சஸ்பெண்ட்
உதவி ஹெச்.எம், ஆசிரியை அந்தரங்க படங்கள் குறித்து தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று நேரடியாக சென்று இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டதில் அந்தரங்க புகைப்படங்கள் அவர்களது செல்போனில் பகிர்ந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ், கணித ஆசிரியை ஹேமா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : HM ,Thiruvidaimarudur ,Kanagaraj ,Bandhanallur Government Boys Higher Secondary School ,Thanjavur ,Hema ,
× RELATED பாமக மாநில நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது