சென்னை: ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்வு, மார்ச் மாதத்திலேயே நடக்கிறது. தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி கடைசி வாரத்தில் முடிவடையும். இந்த நிலையில், படித்துக்கொண்டிருக்கக்கூடிய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்திலேயே இந்த தேர்வுகள் தொடங்கி மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் வகையில் அட்டவணை வழங்கபட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக ஒரு மாதம் முன்கூட்டியே தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக மருத்துவ கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி கடைசி வரத்திற்குள்ளாக ஒட்டுமொத்த தேர்வுகளும் முடிவடைய இருக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 50 மருத்துவ கல்லூரிகளில் 25ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கி முடிய இருப்பது குறிப்பிடத்தக்கது.
