×

மேற்குவங்கம், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

புதுச்சேரி: மேற்குவங்கம், புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது .

மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மேற்கு வங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு 58.8 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 24 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. நிரந்தரமாக இடம்பெயர்ந்த 19 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரியில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது. புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85531 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல்படி புதுச்சேரியில் 7.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

எஸ்.ஐ.ஆருக்கு பின் 10.04% வாக்காளர்கள் நீக்கம்

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 10.04 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் ஜன.15 வரை உரிமை கோரலாம். தகுதி இருந்தால் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தகவல் தெரிவித்தார்.

Tags : West Bengal, Puducherry ,Puducherry ,West ,Bengal Draft ,West Bengal ,
× RELATED லோக்ஆயுக்தா திடீர் சோதனை கர்நாடக அரசு...