சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.12,460க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக, தங்கம் மற்றும் வெள்ளி விலை காலை, மதியம் என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறுதல் அடைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.98,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.6 குறைந்து ரூ.210க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 உயர்ந்து சவரன் ரூ.99,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.12,460க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.213க்கும், விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 உயர்ந்து கிலோ ரூ.2.13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
