×

கார் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

நத்தம், டிச. 15: நத்தம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில், அழகர்கோவில் பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அழகர்கோவில் அருகேயுள்ள ஆயத்தம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (22). இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினர், நண்பர்கள் 8 பேருடன் நத்தம் அருகேயுள்ள சேர்வீடு பகுதியில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லிங்கவாடி பிரிவு பகுதியில் அவர்களது கார் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆயத்தம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் (21), ராகுல் (20), பிரதீப் (21), வினீத் (2) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Natham ,Alagarkovil ,Prakash ,Ayathampatti ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...