×

முட்டை விலை 620 காசாக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை நேற்று முன்தினம் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், நேற்று முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். அதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 620 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மற்ற மண்டலங்களில், முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.7.50க்கு விற்கப்படுகிறது.

Tags : Namakkal ,NECC ,president ,Singaraj ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...