×

பனி மூட்டம் காரணமாக ஏர்இந்தியா விமானங்கள் ரத்தானால் கட்டணம் ரிட்டர்ன்: விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னை: பனி மூட்டம் காரணமாக, ஏர் இந்தியா விமானங்கள் ரத்து மற்றும் தாமதமானால் பயணிகளுக்கு முழு விமான கட்டணமும் திருப்பிக் கொடுக்கப்படும் அல்லது மாற்று விமானங்களில் பயணிக்க விமான டிக்கெட்டுகள் மாற்றிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10ம் தேதி வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. பனி காலத்தில் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டால், அதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்வது, அல்லது பனி மூட்டத்தால், விமானங்கள் தாமதம் காரணமாக, பயணம் செய்ய விரும்பாத பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணத்தில் எந்தவித பிடித்தமும் இல்லாமல், முழு கட்டணங்களையும் திருப்பி அளிப்பது போன்ற வசதிகளையும் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளது. டிசம்பர் 10ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

வானிலை ஆய்வு மைய தகவல்படி பனிமூட்டம் எத்தனை மணியில் இருந்து எத்தனை மணி நேரம் வரை நீடிக்கும் தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் பயணிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தும் போது, அங்கிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டு மற்றும் தென் மாநிலங்களுக்கு வரும் ஏர் இந்தியா விமானங்கள் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து, மற்ற பெரு நகரங்களுக்கு செல்லும்போது விமானங்கள் தாமதங்கள் ஏற்படும். அதேபோன்ற நேரங்களில் அந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஏர் இந்தியா ஃபாக் கேர் திட்டத்தின் படி, வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Air India ,Chennai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...