×

நடிகை மீராமிதுன் மனு தள்ளுபடி

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து நடிகை மீரா மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2021ம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் ஐகோர்ட்டில் மனுசெய்திருந்தார். மனுவில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் தனது உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடும் அதிகளவில் உள்ளது. தற்போதைய சூழலில் விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி கடும் எதிர்ப்பு ெதரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுதாக்கல் செய்ய முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Meera Mithun ,Chennai ,Chennai Principal Sessions Court… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...