- திமுக நகரம்
- நாசரேத்
- திமுக
- பொருளாளர்
- சுடலைமுத்து
- தூத்துக்குடி
- தெற்கு
- மாவட்டம்
- நகரப் பொருளாளர்
- மாவட்ட பிரதிநிதி
- வெள்ளரிக்காயூரணி சுடலைமுத்து
- நாசரேத் நகர பஞ்சாயத்து 1வது…
நாசரேத், டிச. 13: நாசரேத்தில் நகர திமுக பொருளாளர் சுடலைமுத்து இல்லத்திருமண விழா, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி தலைவரும், நாசரேத் நகர பொருளாளர் மற்றும் மாவட்ட பிரதிநிதியுமான வெள்ளரிக்காயூரணி சுடலைமுத்து- நாசரேத் பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் பத்ரகாளி ஆகியோரின் மகன் கொம்பையா என்ற சக்திகுமாருக்கும், இடையர்காடு செல்வக்குமார்- பாப்புலெட்சுமி (எ) வேணி ஆகியோரின் மகள் இசக்கி ஆர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் வெள்ளரிக்காயூரணி பூத நாதர் சமேத உலகம்மன் கோயிலில் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நாசரேத் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள டுவிங்கில் மகாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமண விழாவில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சண்முகையா எம்எல்ஏ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என திரளானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். ஏற்பாடுகளை மணமகனின் பெற்றோர் சுடலைமுத்து, பத்ரகாளி மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் செய்து வருகின்றனர்.
