மார்த்தாண்டம், டிச.13: விளவங்கோடு பரப்பரைவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (54). இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்ட தாஸ் தலைமையிலான போலீசார் நட்டாலம் அருகே செருவருவிளையில் அமைந்துள்ள வின்சென்டின் பெட்டிகடைக்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் 225 கிராம் எடை கொண்ட போதை பாக்கும், 100 கிராம் எடை கொண்ட போதை பாக்கும் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 325 கிராம் எடை கொண்ட போதை பாக்குகளை போலீசார் பறிமுதல் செய்து வின்சென்டை கைது செய்தனர்.
