×

குளச்சலில் மருத்துவமனையில் நிறுத்திய பைக் திருட்டு

குளச்சல், டிச.13: தக்கலை மணலி பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் பிரபு(34). இவர் சம்பவத்தன்று இரவு குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது உறவினரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். மருத்துவமனையின் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டுசென்றார். பின்னர் வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதில் பதறிப்போன பிரபு சம்பவம் குறித்து குளச்சல் போலீசாரிடம் புகாரளித்தார். விசாரணை செய்த போலீசார் சம்பவ இடம் மற்றும் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்த போது, மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடி செல்வது தெரிந்தது. பைக்கை திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kulachal ,Prabhu ,Mani ,Thakkalai Manali ,Kulachal Main Road ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...