20 ஆயிரம் பேருக்கு 60 ஆயிரம் மாஸ்க் தயார் குளத்தில் தவறி விழுந்து சிறுமி பரிதாப பலி

அரியலூர், ஜன.19: அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் அண்மையில் தொடர் மழை காரணமாக சிறிய குளங்கள் முதல் பெரிய ஏரிகள் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன. இந்நிலையில் செந்துறை அடுத்துள்ள உஞ்சினி மாரியம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் ஜெயராமன்-ஜான்சிராணி தம்பதி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். ஜெயராமன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அருகிலுள்ள சமாதி குளத்தின் கரையருகே ஜெயராமனின் மூத்த மகள் ஹன்சிகா(6), பிரபு மகன் குணப்பிரியன்(3), இளங்கோவன் மகள் ராஜபிரகதி(6) ஆகிய மூவரும் சென்றபோது குளத்தின் படிகட்டிலிருந்து தவறி விழுந்துள்ளனர். இதனை கரையின் மேலிருந்து பார்த்த மற்றொரு குழந்தை சத்தமிட்டதில் அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து குழந்தைகளை மீட்டு செந்துறை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஹன்சிகா சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற இரு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். இந்த விபத்து குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>