×

செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் உறுதிமொழியேற்பு விழா

ராமநாதபுரம், டிச. 12: ராமநாதபுரம் செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் நைட்டிங்கேல் அவர்களை நினைவு கூறும் வகையில் விளக்கு ஏற்றுதல் மற்றும் உறுதியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளி ஆசிரியை ஜெய வரவேற்று பேசினார். செவிலியர் பள்ளி தாளாளர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். செவிலியர் பள்ளி முதல்வர் ஜூலி நேசமணி முன்னிலை வகித்தார்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளரும், சிறுநீரகவியல் ஆலோசகரும், நிபுணருமான நூர் முகம்மது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவிகள் உறுதி மொழியை ஏற்றனர். இவ்விழாவில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர். ராசிகா அப்துல்லா, டாக்டர். அட்டிப் அப்துல்லா, டாக்டர். ஷிபா பாபு, டாக்டர். பாத்திமா ஷானாஸ், டாக்டர். இஜாஸ் அப்துல்லா, டாக்டர் ஆயிஷத்துல் நஷிதா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் ஆசிரியை தாரணி அவர்கள் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செவிலியர் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Seyedhu Ammal Nursing School ,Ramanathapuram ,Nightingale ,Jaya ,Nursing School… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...