- தேசிய கராத்தே, சிலம்பம் போட்டி
- சாத்தான்குளம் பள்ளி
- சாத்தான்குளம்
- நிலை சிலம்பம் போட்டி
- தூத்துக்குடி
- டிஎன்டிடிஏ
- ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி
சாத்தான்குளம், டிச. 12: தூத்துக்குடியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றிக் கோப்பையை பெற்றனர். இதேபோல் சென்னையில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வென்று பரிசு, கோப்பைகளை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்றுவித்த கராத்தே, சிலம்பம் மாஸ்டர் அருண், கராத்தே, சிலம்பம் பயிற்சியாளர் அருணாச்சலம் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
