×

ஆறுமுகநேரியில் மது விற்றவர் கைது

ஆறுமுகநேரி, டிச. 12: ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயின் நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ வாசுதேவன் தலைமையில் போலீசார், இப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக மொபட்டில் நின்றிருந்தவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவா (48) என்பதும், மது பாட்டில்களை மொபட்டில் மறைத்து வைத்து அதிக விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்து 7 மதுபாட்டில்கள், ரூ.66 ஆயிரத்து 500 மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் திலீபன் விசாரணை நடத்தி திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை. சிறையில் அடைத்தனர்.

Tags : Arumuganeri ,Jain Nagar ,SI Vasudevan ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...