×

ஒரே ஆண்டில் 3வது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்கு செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இது ஒரே ஆண்டில் 3வது முறையாக குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது என பெடரல் வங்கி எச்சரித்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் மற்றும் கார் அடமான கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கம், சமீப மாதங்களில் சற்று குறைந்துள்ளது. ஆனால் பெடரல் நிர்ணயித்த 2 சதவீதம் இலக்கு எட்டப்படவில்லை. அதனால் வட்டி குறைப்பில் இன்னும் எச்சரிக்கை தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளதால், தற்போது 3.5% – 3.75% என்ற வரம்பில் இருக்கும்.

Tags : US Federal Bank ,Washington ,Federal Bank ,bank ,USA ,United States ,
× RELATED கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும்...