×

மணக்குடியில் திமுக தெருமுனை பிரசாரம்

அரியலூர், டிச. 11: அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரசாரம் மணக்குடியில் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கர் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் அரியலூர் மத்திய ஒன்றிய திமுகச் செயலாளர் இளையராஜன் தலைமை வகித்தார்.

மணக்குடி கிராமத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் தலைமை திமுக இளம் பேச்சாளர் பரத் சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு முதலமைச்சரின் மக்கள் நல திட்டங்களான மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், மகளிர் உரிமைத்தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின், வயது முதிர்ந்தோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் சிறப்புகளை விளக்கினார்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, அவைத் தலைவர் முத்துசாமி, அரியலூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் அன்பரசன், அரியலூர் மத்திய ஒன்றியத்திற்கு அனைத்து மாவட்ட அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், BLA2 மற்றும் BDA , BLC உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Manakudi ,Ariyalur ,Ariyalur Central Union DMK ,Udhayanidhi Stalin ,Ariyalur District ,Transport ,Power Minister ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...