×

புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மாதர்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,

காஞ்சிபுரம் – உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியம்,

விழுப்புரம் – வானூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கிளியனூர் ஊராட்சி ஒன்றியம்,

திருவண்ணாமலை – தெள்ளார் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து மழையூர் ஊராட்சி ஒன்றியம்,

கிருஷ்ணகிரி – தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து சாயல்குடி ஊராட்சி ஒன்றியம்,

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் கானை ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து கஞ்சனூர் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கம்.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Viluppuram ,Tiruvannamalai ,Krishnagiri ,Ramanathapuram ,Kummidipundi Government Union ,Matarbakkam Government Union ,Uttaramore ,
× RELATED அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு...