×

எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

 

சென்னை: சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. தேர்தல் கூட்டணி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம். ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ்.ஐ.ஆர்.யை வரவேற்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்று கட்சியின் பொதுக்குழுவில் திட்டவட்டம். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை தனித்தனியாக சந்தித்து பேசிய அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிட அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம். தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய முடியாது என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். டி.டி.வி. தினகரன் நிபந்தனையை நிராகரிக்கும் வகையில் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 

Tags : EDAPPADI PALANISAMIYE ,MINISTER ,ADAMUKA GENERAL COMMITTEE ,Chennai ,Adimuka General Committee ,Vanakaram Srivaru Wedding Hall ,General Committee ,Executive Committee ,Tamilmakan Hussain ,Adimuga General Assembly ,Tamil Nadu Assembly Election ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்...