- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சபரிமலை
- திருவனந்தபுரம்
- சுந்தர்
- திருப்பாதிப்புலியூர்
- கடலூர்
- பாம்பே
- சாரங்குத்தி
- அப்பாச்சிமேடு
- மரக்கூட்டம்
திருவனந்தபுரம்: கடலூர் திருப்பாதிப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (67). நேற்று இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் சபரிமலை தரிசனத்திற்காக வந்திருந்தார். நேற்று காலை பம்பையில் இருந்து புறப்பட்ட சுந்தர் சரங்குத்தி, அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானத்தை அடைந்தார். நேற்று சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசை வளாகத்தில் நீண்ட நேரம் இவர் வரிசையில் காத்திருந்தார். பின்னர் 18ம் படி ஏற முயன்ற போது திடீரென அவர் மயங்கி விழுந்து இறந்தார். தொடர்ந்து சுந்தரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. 18ம் படி அருகே வைத்து மரணம் நிகழ்ந்ததால் சபரிமலை கோயிலில் நேற்று பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
