×

களக்காட்டில் குளத்தில் தவறிவிழுந்தவர் தண்ணீரில் மூழ்கி சாவு

களக்காடு, டிச.9: களக்காட்டில் குளத்தில் தவறிவிழுந்த முதியவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம், களக்காடு கக்கன் நகரை சேர்ந்தவர் வேல்மயில் (68). இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கக்கன்நகரில் பெட்டிக்கடை நடத்தி வந்த வேல்மயில், நேற்று முன்தினம் அவர் களக்காடு பஸ் நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குடிதாங்கி குளக்கரையின் வழியாக வந்த போது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalakkad ,Velmayil ,Kalakkad, Kakkan Nagar, Nellai district ,Saroja ,Kakkan Nagar… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...