×

மது விற்ற இருவர் கைது

 

கூடலூர், டிச.8: தேனி மாவட்டம் கூடலூர் புதிய பேருந்து நிலைய சுகாதார வ்ளாகம் அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து சட்டத்துக்கு புறம்பாக விற்பனையில் ஈடுபட்ட, மேலக்கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்த காளிமுத்து(62) என்பவரை உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.அதேபோல் கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியின் போது கூடலூர் பள்ளிவாசல் அருகே கடையில் வைத்து சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்ட கூடலூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த முருகன்(47) என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 43 மதுபான பாட்டிகளை கைப்பற்றி முருகனை கைது செய்தனர்.

 

Tags : Gudalur ,Uttampalayam Prohibition Enforcement Division ,Kalimuthu ,Kannikalipuram, Melakudalur ,Gudalur New Bus Stand ,Theni district.… ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...