×

உளுந்தூர்பேட்டை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியர் கைது

 

உளுந்தூர்பேட்டை, டிச. 8: உளுந்தூர்பேட்டை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியரை போலீசார் கைது செய்தனர்.  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜா (28). இவரது மனைவி சத்யா (23) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உளுந்தூர்பேட்டை நகராட்சி விருத்தாசலம் ரோட்டில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை முடிந்து வெளியே வந்தபோது குழந்தை கழுத்தில் அணிந்திருந்த 2 கிராம் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தங்கராஜா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரித்தா வழக்குப்பதிவு செய்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.

Tags : Ulundurpet Children's Hospital ,Ulundurpet ,Thangarajah ,Redtipalayam ,Panruti ,Cuddalore district ,Sathya ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...