- திமுக்
- பாஹியா
- Ilampillai
- Makudanjavadi
- பாஜா
- திமுகவ்
- சேலம் மாவட்டம்
- மகுடஞ்சாவடி
- மேற்கு மாவட்ட பாஜா
- துணை ஜனாதிபதி
- பாலு
- அக்கட்சி
- மாவட்ட செயலாளர்
- டி. எம் செல்வாகனபதி எம். பி.
இளம்பிள்ளை, டிச.8: மகுடஞ்சாவடியில், பாஜவில் இருந்து விலகிய 100 பேர் திமுகவில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில், மேற்கு மாவட்ட பாஜ துணைத் தலைவர் பாலு உள்பட 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு எம்பி வாழ்த்து தெரிவித்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், இடங்கணசாலை நகர செயலாளர் செல்வம், மகுடஞ்சாவடி மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
