உத்திரமேரூர், டிச.8: உத்திரமேரூர் அருகே, பங்களாமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் புனிதநீர் கொண்டு வரப்பட்டு சுமார் 30 அடி உயரம் கொண்ட பக்த ஆஞ்சநேயர் சிலை மீது ஊற்றப்பட்டது. புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பித்தபின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
