×

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை ரசித்த சுவிட்சர்லாந்து ஹாக்கி வீரர்கள்

சென்னை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மாமல்லபுரம் வருகை தந்து கடற்கரை கோயிலை கண்டு ரசித்தனர். இப்போட்டி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 10ம் தேதி வரை நடப்பு ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

இதில், சர்வதேச அளவில் 24 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. இப்போட்டிகளை, தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் இணைந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற சுவிட்சர்லாந்து வீரர்கள் நேற்று மதியம் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து ரதம் நுழைவு வாயில் அருகே வந்தனர்.

சுவிட்சர்லாந்து வீரர்கள் அனுமதி கடிதம் வாங்கி வராததால், தொல்லியல் துறை நிர்வாகம் உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவு பகுதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் நுழைவு சீட்டு வாங்கி புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து ரசித்தனர்.

Tags : Mamallapuram ,Chennai ,Junior World Cup Hockey ,Tamil Nadu ,Madurai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...