×

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு அரிவாள் வெட்டு: கணவர் உயிரிழப்பு

கோவில்பட்டி: சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிக்கு அரிவாள் வெட்டு. இதில் கணவர் உயிரிழந்தார். நெற்கட்டும்சேவல் அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் – சுப்புத்தாய் தம்பதியை வழிமறித்து வெட்டியுள்ளனர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சங்கரலிங்கம் உயிரிழந்தார். சுப்புத்தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலத்தகராறில் உறவினர்களே சங்கரலிங்கத்தை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Sankaranko ,Kovilpatty ,Pacheri ,Nellhatumsewal ,Sankaralingam ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ரூ.2.3 கோடி...