×

ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பரிந்துரை பட்டியல் வெளியீடு!

 

துபாய்: ஐ.சி.சி.-ன் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் சிமோன் ஹார்மர் (தென் ஆப்பிரிக்கா), முகமது நவாஸ் (பாகிஸ்தான்) மற்றும் தைஜுல் இஸ்லாம் (வங்காளதேசம்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஷபாலி வர்மா (இந்தியா), திபாட்சா புத்தவோங் (தாய்லாந்து) மற்றும் ஈஷா ஒசா (யுஏஇ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags : ICC ,Dubai ,International Cricket Council ,
× RELATED 4வது டி20 கிரிக்கெட்: இந்தியா-தெ.ஆப்ரிக்கா மோதல்